18 May 2014 6:04 am
சந்தன சோப்பில்தலைக் குளித்துஜவ்வாது பவுடரில் உடல் பூசிஜமீன்போல் புறப்பட்டு விட்ட மனிதா!உன்னை சுத்திகரித்துகொள்கிறாய் அழகாய்!உலகை குப்பை கூடையாய்ஆக்கிவிட்டாய் வீணாய்!பதுமை போர்த்திய பூமியைகுப்பை பொட்டலமாக்கிநெகிழி பைகளுக்குள் – நீதிணித்துக் கொண்டிருக்கிறாய்!புனித நதிகளின் புனிதம்கெடுத்துசாயக்கழிவு களுக்கிடையேமனித பிரேதங்களை மிதக்க விடுகிறாய்!நச்சு புகையை கக்கி, கக்கிபூகோள உருண்டையைவெப்பத் தீ யிலிருந்து காக்கும்ஓசோன் குடையையும்ஓட்டை யாக்கிக் கொண்டிருக்கிறாய்!ஆழ் துழாய் கிணறுகளைஅசுரதணமாக தோண்டி…பூமிதாயின் அங்கங்களைபுண்ணாக்கிக் கொண்டிருக்கிறாய்!ஆற்று மணலைஅநியாயமாய் சுரண்டி, சுரண்டிநாற்று வயல்களைமலடியாக்கிக் கொண்டிருக்கிறாய்!பிராண வாயுவின்பிர்மாக்களாகிய மரங்களை வெட்டி…மாளிகை கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும்ஆடம்பர அரண்மனைகள் கட்டி கொண்டால்சுத்தமான காற்றைசுவாசிக்க – நீசுடுகாட்டுக்கா போவாய்!விளை நிலங்களை விலை நிலங்களாக்கி விற்றுவிட்டுவிண்ணை முட்டும் மாடிகளை கட்டி கொண்டால்சோத்துக்கு – நீசோமாலிய நாட்டுக்கா போவாய்!பஞ்ச பூதங்களைநஞ்சாக்கி விட்டு – நீஎன்றவுன் சூதகத்தைஎந்த தேக்கு மரகட்டிலில்படுக்க வைத்தாலும்தூக்கம் வருமா? சொல் மனிதா!சராசரி மனிதன் முதல்நுண்ணறிவாளன் வரைவிளம்பர காலணிகளை மாட்டிக் கொண்டு வேக வேகமாக ஓடுகிறான்விரல்கள் தேய்வது கூட தெரியாமல்…- சி.கவிச்சித்தன், திருச்செங்கோடு