15 March 2016 10:06 pm
அவருக்கா இவருக்காஅந்த அணிக்கா…இந்த அணிக்கா…எவருக்கு அளித்தால்தான்என்ன?உனக்குக் கிடைப்பதென்னவோநாமம் தான்.. நமோ..நமோ..நாமம்தான்..தொகுதி மாறி நின்றுதோற்றால்தான் என்ன?ஒட்டவா போகிறதுமீசையில் மண்.?செம்புள்ளி கரும்புள்ளிகுத்தும்முன்உனக்குக்குத்தப்படுகிறதுவிரல்களில் கரும்புள்ளிவாக்குக்கு எவ்வளவுஎன்று நீகணக்குப் போடுவதற்குள்காணாமல் போய்விடும்உன் வாக்கு.ஒவ்வொரு கும்பலுக்கும்உன்மேல்எத்தனை கரிசனம்..உன்னை எரித்தல்லவாகொண்டாடுகிறார்கள்தங்கள் வெற்றிகளை..?ஐந்தாண்டுக்கு ஒருமுறைகுத்தகைக்கு எடுக்கிறார்கள்..நீயும்கொண்டாடிக்கொண்டேகொத்தடிமை ஆகிறாய்.ஒவ்வொரு தேர்தலுக்கும்விலைபேசப்படும்ஆடு நீ..வெட்டப்படுவது தெரியாமல்விளையாடி மகிழ்கிறாய்..தேர்தல் சந்தடியில்தேம்பும் அழுகுரலைஒளித்துவைத்துக் கொண்டேபோகின்றன..விதவித ஊர்வலங்கள்..மிதிபட்டுக் கொண்டேதுதிபாடுகிறாய்இந்தத் திருவிழாஇனி எப்போது வரும்என்றபடியே தூக்கத்தைத் துரத்திக் கொண்டோடுகிறாய்..எப்போது எழப்போகிறாய்?- சென்னிமலை தண்டபாணிவெள்ளைச் சவப்பெட்டிபுழுதிக்குப் பயந்து தன் மூக்கை மூடினான்வெண்சுருட்டு* புகைப்பவன்!வெளியே எரிகிறது வெண்சுருட்டுஉனக்குள்ளே சாம்பலாகிறாய் நீ..பலூன் நீ! நிரப்புகிறாய் புகைவிரைவில் வெடித்து உடைய..எரிகிறது உன்குழந்தை மனைவி மகிழ்ச்சிநீ வெண்சுருட்டுக்கு நெருப்பு வைக்கும்போது..உன் உயிரறுக்கும் வெண்கத்திவிரல்கள் இடுக்கில்ஓர் ஊருக்குத் தீ வைக்கிறான்புகையாளி!காற்றில் வெள்ளை வெள்ளையாக மிதக்கிறதுஉனக்குச் சாத்தும் மலர் வளையங்கள்நீ புகைச்சாவி கொண்டு திறக்கிறாய்இருமல் வீட்டைஉன் குழந்தையை ரசிக்கத் தெரியாத நீஅதன் வாழ்வைப் புகைக்கிறாய் தீ மூட்டிபுகைஉன்னைப் புதைக்கின்ற சவக்குழிமலர்களின் நறுமணம் அமர்ந்து கொள்கிறதுவெண்சுருட்டு வாடை படாத உதடுகளில்வெண்சுருட்டுஅது வெள்ளைச் சவப்பெட்டி* சிகரெட்- ராசகவி ராகில்