16 August 2014 10:21 am
குருதியெலாம் புரட்சிமணம் கமழ்ந்த வீரர் கொள்கைதனை உயிர்மூச்சாய் கொண்ட சீலர்பெருநெருப்பாய் சுதந்திரத்தீ மூட்டி எங்கும் பொதுஉடமைக் கருத்துகளை விதைத்த வேந்தன்உறுதியுடன் ஏழையர்க்காய் உழைத்து நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க சிறைக்குள் சென்றஒருகவிஞன் பல்துறையில் புலமை மிக்கோன் உலகிற்கே தோழதென விளங்கும் ஜீவா!ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழாம் ஆண்டு ஆகஸ்டு இருபத்து ஒன்றாம் நாளில்பாயிரத்தின் வேர்பூதப் பாண்டி மண்ணில் பட்டம்பிள் ளைஉமையம் மாள் இணைக்குஞாயிறென உதித்தவர்தான் தோழர்; கல்வி ஞானம் உடல் நெஞ்சுறுதி நேர்மைப்பண்புபூவுலகில் இவரைப்போல் வாய்த்தா ருண்டோ! பொதுநலனும் கலையுணர்வும் மிகுந்தா ருண்டோ!காந்திஜியின் போதனையால் தேசப் பற்றும் கதரணிந்து போராடும் துணிவும் பெற்றார்.மாந்தநேய தந்தைபெரி யார் வழியில் மானுடத்தில் ஜாதிகுலம் பாவம் என்றுதாழ்ந்தவனை அணைத்தபடிகோவில் சென்றார் ஜாதிவெறி அரக்கர்களால் படிப்பை விட்டார்.காந்தியிடம் இந்தியாஎன் சொத்து" என்றார். "இந்தியாவின் சொத்துநீர்தான்" என்றார் காந்தி.பேச்சுரிமை நிலைநாட்ட சிறைக்குச் சென்றார் சிறையினிலே பகத்சிங்கின் நட்பைப் பெற்றுமூச்செல்லாம் கம்யூனிசமாய் வெளியே வந்தார் குமரியிலே இயக்கமொன்றைத் தோற்று வித்தார்தீச்சுடராய் ஜனசக்தி இதழ்அச் சிட்டார் சிலகாலம் தலைமறைவாய் ஈழம் சென்றார்பேச்சாற்றல் மனத்துணிவு இவற்றால் சட்டப் பேரவையின் பதவியுடன் சேவை செய்தார்.கலை வளர்க்கும் கோயிலென திகழ்ந்தார் ஜீவா கட்டுரைகள் கவிதைஎன நூல்கள் செய்தார்உலகறியப் பாரதியை தமிழ் அரசும் நாட்டுடமை ஆக்கிடவே பாடு பட்டார்.இலக்கியத்தில் முற்போக்கை விதைத்தி டவே இன்றுமுள தாமரையை மலரச் செய்தார்.கலையுலகில் விருதுபல பெற்றார் தமிழ்க் களஞ்சியத்தை உருவாக்கி நினைவில் வாழ்வார்.- குடந்தை பரிபூரணன்"