மருதாணி - தமிழ் இலெமுரியா

16 August 2016 1:30 pm

எம்பி எம்பிக் குதித்தேன்எட்டவில்லை…எதிர்வீட்டுமருதாணிக் கிளை.குட்டச்சி குட்டச்சிகை கொட்டிச்சிரித்தாள்என் தோழி !அவள் ஒரு நெட்டச்சி.தூக்கினாள் என்னைநெட்டச்சிபழைய பாவாடைக்குள்புதிய இலைகள்.அரைத்துத் தரஎன் அம்மாவைவேண்டினேன்!பச்சை விறகுடன்அம்மா அடுப்புடன்போராட்டம்!நானே அம்மியில்அறைத்தேன்.என் கை சிவந்ததுவாய் சிரித்தது.மருதாணியைஅப்பிக் கொண்டேன்ஐந்து விரல்களும்நகச் சுத்தியாயின.சாப்பிடப் பிடிக்கலேதூங்கி எழுந்தேன்.பாயெங்கும்மருதாணித் தூள்இந்தக் கருவாச்சியின்கைகள் இரண்டும்கட்சி மாறிப் போயினசிவப்பாய்!அம்மா அப்பாஎல்லோரிடமும்கை"யைக்காட்டினேன்.அப்பா முகம் சிவந்தார்.வறுமையிலும்செம்மையாய்இரு – உண்மையாய்இரு – அதுவேசிவப்பு – சிறப்புஎன்றார்.இளமைநினைவுகள்இன்னும் இப்போதும்புரிகிறது…அடுத்த வீட்டுமருதாணி"இலை"க்குக் கூடஆசைப்படக்கூடாதென்று. – ஞா.சிவகாமி"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி