18 November 2016 12:03 pm
இன்றைய இளமையேநாளைய முதுமை!ஞாயிறு போற்றினோம்வான்மழை போற்றினோம்காதலர்நாளையும் போற்றினோம்முதுமையை ஏன் போற்றுவதில்லை?முதுமையை ஒரு சுமையாக நோயாகதேவையற்ற ஒற்றுப்பிழையாகபொருளியல் பங்களிப்பை வழங்காத வறட்டுப் பீடையாக…உண்பதும் உறங்குவதுமாகபேசிப்பேசியே சிக்கல்களைஉருவாக்கும்ஓடாத இயந்திரமாக…ஓட்டை விழுந்தபடகைஒதுக்கி விடுவது போல…கிழடு சாகவும் மாட்டேங்குதுகட்டிலும் ஒழிய மாட்டேங்குதுபாடாவதி கிழட்டுச் சனி…இப்படியெல்லாம்பலவகைப் பழிப்புகளால்புறக்கணிக்கப்படுவது ஏன்?காய்க்காத மரங்கள்வெட்டப்படுகின்றன!ஆட்டில் மாட்டில்முதுமை தட்டினால்அடிமாடுகளாகின்றன!மானில் புலியில்ஓடமுடியாத கிழடுகள்மற்றவைக்கு உணவாகின்றன!கிழவன் கிழவிகளைஎன்ன செய்வது?உண்ணவோ வெட்டவோமுடியவே முடியாதேஉயிரைவிடவும் மாட்டார்களே!சூழ்ந்து கவ்வும் இரங்கத்தக்கமுதுமையைப் போற்றி..முதுமையே வலிமைஓர் அடையாளம்ஓசையற்ற ஒளிவிளக்குவழிகாட்டிநிழல்தரு மரமென்றுஏன் நினைப்பதில்லை? -தென்மாவை தருமு