16 June 2016 6:48 pm
அள்ளும் கறிச்சோற்றை அள்ளத் தடுத்தார்யார்?கொள்ளும் குடிநீரைக் கொடுக்க மறுத்தார்யார்?முள்ளில் நடப்பதற்கு முன்னால் அழைத்தார்யார்?பள்ளியில் தாய்மொழியைப் பாடமொழி ஆக்காதார்!துள்ளித் திரிவதற்குச் சுடுகின்ற பாழ்வெளியா?கள்ளிப் பெருங்காட்டில் கண்மூடி நடப்பதுவா?புள்ளிச் சிறுமானைப் புலிமுன்னே வீசுவதா?பிள்ளைப் பருவத்தில் பிறமொழியின் ஈட்டிகளா?எள்ளிப் பிறர்சிரிக்க எலிகள் உடன்சிரிக்கவெள்ளை முயல்சிரிக்க வெங்காயம் தான்சிரிக்கஉள்ளான் பறவைகளும் ஊரில் சிரித்திருக்கவெள்ளம் வருவதுபோல் வேற்றுமொழி வரலாமா?எள்ளில் இருக்கின்ற எண்ணெய் எழுவதுபோல்பள்ளிப் படிப்பினிலே பயிற்றுமொழி தாய்மொழியே!தள்ளுகிற குப்பையிலே தமிழைநாம் தள்ளாமல்வள்ளுவன் சொல்கேட்டால் வல்லரசு நாமாவோம்! – ஆலந்தூர் கோ. மோகனரங்கன்