16 December 2014 3:57 pm
கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நல உதவி அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேதகு தமிழ்நாட்டு ஆளுநர் முனைவர் ரோசய்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பதினைந்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக வளரும் அறிவியல் இதழின் ஆசிரியர் முனைவர் இ.கே.தி.சிவகுமார் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு மேனாள் பாராளுமன்ற உறுப்பினரும் ராசி குழும நிறுவனங்களின் தலைவருமான திரு.சி.நரசிம்மன் தலைமையுரை ஆற்றினார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைவரும் நிருவாக இயக்குநருமான மிலிந்த்காரத் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (CVRDE) இயக்குநர் டாக்டர்.பி.சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக எஸ்ரோவின் உறுப்பினர் அபிசேக் பாலாஜி நன்றியுரை வழங்கினார்.