20 August 2013 7:40 pm
– கவிஞர் தமிழேந்தி
பாவேந்தர் பரதிதாசன் மீது தீராத பற்று கொண்ட கவிஞர் தமிழேந்தி எழுதிய “பன்முக நோக்கில் பாவேந்தர்” எனும் இந்நூல், பாரதிதாசனின் கவிதைகளுக்கு மேலும் சுவையூட்டுவதாக அமைந்துள்ளது. கவிஞர் தமிழேந்தி எந்த அளவிற்கு பாரதிதாசனின் கவிதை வரிகளால் ஈர்க்கப்பட்டு, அக்கவிதையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார் என்பதை இந்நூலின் மூலம் அறியலாம். பாவேந்தர் பாரதிதாசனின் தமிழறிவு, தமிழுணர்வு, சாதியொழிப்பு எண்ணங்கள், பொதுவுடைமைச் சிந்தனைகள், பெண்ணியம், காதல் கவிதைகள், இயற்கை எழில், நகைச்சுவை, பகுத்தறிவு பகலவனுடன் கொண்ட பற்று என அவரது கவிதைகளில் ஒளிர்ந்த அனைத்துச் சிந்தனைகளையும், நிகழ்வுகளையும் நூலாசிரியர் தெளிவுற வெளிப்படுத்தியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசனின் தாசனாக விளங்கும் கவிஞர் தமிழேந்தியின் இந்நூல், தமிழ் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நூல் ஆகும்.
புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம்,
வள்ளுவர் இல்லம், 44 இராசாசி வீதி,
அரக்கோணம் – 631 001
பக்கங்கள்: 160
விலை: 80